
விஜய் பட தலைப்பில் கென் கருணாஸ்
இதில் கென் கருணாஸ் உடன் இணைந்து சுராஜ் வெஞ்ராமுடு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த படத்திற்கு "யூத்" என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இதில் இப்படம் வருகின்ற பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இதே தலைப்பில் 2002ல் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் விஜய், சந்தியா கான் நடிப்பில் ஒரு படம் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!