
டாக்சிக்கால் கடும் சர்ச்சை : இன்ஸ்டாகிராம் விட்டு விலகிய டாக்சிக் நடிகை
அந்த வீடியோ, "ஆபாசமான மற்றும் ஒழுக்கக்கேடான" வீடியோ என கர்நாடகா மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய தணிக்கை வாரியமும் அந்த வீடியோ குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது.
இதனிடையே, இந்த வீடியோ குறித்து எழுந்துள்ள கடும் சர்ச்சை காரணமாக அதில் நடித்த பிரேசில் நடிகை பீட்ரிஸ், இன்ஸ்டாகிராம் தளத்தை தற்போது "டீஆக்டிவேட்" செய்துள்ளார். அவருடைய தளத்திற்குச் சென்று பலரும் எதிர்ப்பு கமெண்ட்டுகளைப் பதிவிட்டுள்ளதால் அவர் இந்த முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!