
2026 : ஓடிடியில் நேரடியாக வெளியான முதல் படம் அனந்தா
பின்னர் அது படிப்படியாக அப்படியே குறைந்து போனது. கடந்த 2025ம் வருடத்தில் 5 படங்கள் மட்டுமே ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகின.
இந்த 2026ம் வருடத்தில் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியான முதல் படமாக நேற்று ஜனவரி 13ம் தேதி "அனந்தா" திரைப்படம் வெளியாகி உள்ளது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், தேவா இசையமைப்பில், ஜெகபதி பாபு, சுஹாசினி, ஒய்ஜி மகேந்திரா, நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். சத்யசாய்பாபாவின் மகிமைகளைப் பற்றிச் சொல்லும் ஆன்மிகப் படமாக உருவாகியுள்ளது. ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் படம் வெளியாகி உள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!