
பூரி ஜெகநாத் இயக்கும் படத்தில் பிச்சைக்காரனாக விஜய் சேதுபதி!
பாண்டிராஜ் இயக்கிய "தலைவன் தலைவி" படத்தை அடுத்து தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கும் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய் சேதுபதி. இப்படத்தில் அவருடன் ஹிந்தி நடிகை தபு, மலையாள நடிகை சம்யுக்தா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் பூரி ஜெகநாத், நடிகை சார்மி இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் கேரக்டர் குறித்த ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதில், இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு பிச்சைக்காரன் வேடத்தில் நடித்திருப்பதாகவும், தபுவை அவர் காதலிப்பது போன்ற கதையில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!