
நாளை ஜனநாயகன் படம் ரிலீஸ் இல்லை!
விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள "ஜனநாயகன்" திரைப்படம் நாளை (ஜன.,9) ரிலீஸ் ஆவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதால், பட வெளியீட்டுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில், விசாரணையின் முடிவில், நாளை(9ம் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
@subtitle@ஒத்திவைப்பு@@subtitle@@
இந்நிலையில், இந்தப் படத்தை தயாரித்த நிறுவனம், தவிர்க்க முடியாத காரணங்களினால் படத்தை ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
@subtitle@கனத்த இதயத்துடன்..@@subtitle@@
இதுகுறித்து வெளியான அறிக்கை: கனத்த இதயத்துடன் இந்த அப்டேட்டை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் கட்டுப்பாட்டை மீறியுள்ள சூழல் காரணமாக, ஜனநாயகன் படம் வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்ச்சிகளை புரிந்து கொள்கிறோம். இந்த முடிவை எடுப்பது எளிதல்ல. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்களின் பேராதரவே எங்கள் மிகப்பெரிய பலம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!