
இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது : இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தகவல்
இந்நிலையில், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் திரையுலகினர் இன்று காலை பாரதிராஜா அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். பின்னர், ஆர். கே செல்வமணி பேசுகையில் ""இயக்குனர் பாரதிராஜா குறித்து சில நாட்களாக தவறான தகவல் வருகிறது. இன்று நாங்கள் அவரை சந்திக்க வந்தோம். அவர் ஐசியூவில் இருக்கிறார். அவருக்கு தொடர்ந்து நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் உறுப்புகள் நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாங்கள் அவரை சந்திக்க முடியவில்லை. நேற்று அவரை குடும்பத்தினர் சந்தித்துள்ளனர்.
நாங்கள் டாக்டர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தோம். அவர் மீது அக்கறை உள்ளவர்கள் அவர் நலம் பெற பிரார்த்தனை செய்யுங்கள். அவர் உடல்நிலை குறித்து மருத்துவமனை சொல்வதை மட்டும் நம்புங்கள். ஆர்வகோளாறு காரணமாக தவறான செய்திகளை பரப்பாதீர்கள்"" என்றார்.
அதை தொடர்ந்து மருத்துவமனை சார்பில் பாரதிராஜா உடல்நிலை குறித்த அறிக்கை விடப்பட்டுள்ளது. அதில் பாரதிராஜாவுக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது. ஐசியூவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் உறுப்புகளில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது"" என தெ ரிவிக்கப்பட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!