300வது படத்தை எட்டிய யோகி பாபு
ஜன 02, 2026
Advertisement
தமிழ் சினிமாவில் காமெடியனாக என்ட்ரி கொடுத்த யோகி பாபு, சமீபகாலமாக கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதோடு காமெடியன்களாக நடித்து வந்த சந்தானம், சூரி போன்றவர்கள் முழுநேர ஹீரோவாகிவிட்டதால் இப்போது யோகி பாபு மட்டுமே பிரதான காமெடியனாக இருந்து வருகிறார். தற்போது 300 வது படம் என்ற இலக்கை அடைந்திருக்கிறார் யோகி பாபு. அவர் நடிக்கும் 300 வது படத்திற்கு அர்ஜுனன் பேர் பத்து என்று டைட்டில் வைத்துள்ளார்கள். இதை ராஜ் மோகன் என்பவர் இயக்குகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், தலைவன் தலைவி படத்துக்கு பிறகு, தற்போது கருப்பு, ஜெயிலர்-2, தி ராஜா சாப், அட்லீ -அல்லு அர்ஜூன் படங்களை தொடர்ந்து ரவி மோகன் இயக்கும் அன் ஆர்டினரி மேன் என்ற படத்தில் அடுத்து கதையின் நாயகனாக நடிக்கிறார் யோகிபாபு. ‛‛இது எனது 300வது படம், இத்தனை படங்களுக்கு எனது ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. இன்னும் படங்கள் பண்ணனும். உங்களின் ஆதரவு தேவை"" என்கிறார் யோகிபாபு.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!