
பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த்
டிச 29, 2025
Advertisement
நடிகை ருக்மணி வசந்த் கன்னட சினிமாவின் மூலம் அறிமுகமாகி தமிழில் ஏஸ், மதராஸி ஆகிய படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன் ரிஷப் ஷெட்டி நடிப்பு, இயக்கத்தில் வெளியான ‛காந்தாரா சாப்டர் 1" படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் ருக்மணி வசந்த் நடித்து அசத்தினார். இந்த படத்திற்கு பிறகு பான் இந்தியா அளவில் கவனிக்கப்படும் ஹீரோயின் ஆக அவர் மாறியுள்ளார். தற்போது டாக்சிக், என்டிஆர் படம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ள அவரின் 17வது படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். தற்போது அவர் நடித்து வரும் மூன்று படங்களும் பான் இந்தியா அளவில் உருவாகின்றன. இதன்மூலம் அவரும் பான் இந்தியா அளவில் இன்னும் பிரபலமாக வாய்ப்புள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!