
2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ்
2026ம் வருடத்தின் முதல் வெள்ளிக்கிழமையான ஜனவரி 2ம் தேதி “அனலி, டியர் ரதி, ஜஸ்டிஸ் பார் ஜெனி, காக்கா, மாமகுடம், தி பெட்” ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்கள் அதிகபட்சமாக ஒரு வாரம்தான் தியேட்டர்களில் இருக்க முடியும்.
அடுத்த வாரம் ஜனவரி 9ம் தேதி விஜய் நடித்துள்ள "ஜனநாயகன்", சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்துள்ள "பராசக்தி" ஆகிய படங்கள் வெளியாகின்றன. தமிழகத்தில் இருக்கும் அனைத்து ரிலீஸ் தியேட்டர்களிலும் இந்த இரண்டு படங்களும் வெளியாகிவிடும். அதனால், வேறு எந்த படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை. இரண்டு படங்களின் வரவேற்பைப் பொறுத்து அதற்கடுத்த வாரமான ஜனவரி 16 ஏதாவது படங்கள் வெளியாகலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!