
55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ்
அதன்பின் அந்தப் படம் பற்றிய அப்டேட்ஸ் அதிகமாக வரவில்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அப்படத்தின் தயாரிப்பிலிருந்து அன்புச்செழியன் விலகியதாக செய்திகள் வந்தன. தற்போது அந்தப் படத்தை அவரிடமிருந்து சுமார் 30 கோடிக்கும் அதிகமாக பணம் கொடுத்து தனுஷ் தன் வசப்படுத்தியுள்ளார் என்று சொல்கிறார்கள்.
அன்புச்செழியனுக்கு தனுஷ் தரவேண்டிய கடன் தொகை, இந்த தனுஷ் 55வது படத்திற்கான இதுவரை செய்த செலவுகள் 30 கோடி பிளஸ் என்கிறார்கள். தனுஷுக்கு இந்த வருடம் தமிழில் இயக்கிய படமும், நடித்த படமும் சரியாகப் போகவில்லை. அதனால், இந்த 55வது படத்தை பெரிதும் நம்புகிறாராம். எனவேதான் அதை கைவிட மனமில்லாமல் அவரே பேச்சு வார்த்தை நடத்தி வாங்கிவிட்டதாகத் தகவல்.
விரைவில் அவருடைய சொந்த நிறுவனமான உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் பற்றிய புதிய அப்டேட் வெளியாகலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!