
கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது
நான் நடித்த திரைப்படங்களில் "கூரன்" என்ற படத்தில் நடித்தது, அதிலும் ஒரு நாயுடன் நடித்தது வித்தியாசமான அனுபவம். அது ஒரு நாய்க்கும் மனிதருக்குமான பாசம் சம்பந்தப்பட்ட கதை. "கூரன்" படத்தில் நடித்ததற்காக எனக்கு சிறந்த நடிகர் என்ற ஒரு விருது கிடைத்துள்ளது. பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா மற்றும் பீப்பிள் பார் அனிமல்ஸ் அமைப்பினர் இணைந்து இந்த விருதை எனக்கு வழங்கியிருக்கிறார்கள்.
சினிமாவில் அன்பைப் பற்றிச் சொல்லப்படுவதற்காக "சினிகைண்ட்" என்கிற அந்த விருது வழங்கப்படுகிறது. அந்த விருதைப் பெற்றுக் கொள்ளும்படி எனக்கு அழைப்பு வந்தது. கோல்கட்டாவில் உள்ள ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் எனக்கு விருதை வழங்கினார்கள். நான் எனது மனைவியோடும் மகிழ்ச்சியோடும் அந்த விழாவில் கலந்து கொண்டு விருதினைப் பெற்றுக் கொண்டேன். சினிமாவில் நம்பிக்கையோடும் அர்ப்பணிப்போடும் உழைப்பை வழங்கினால் அது நமக்குப் பெருமையையும் அங்கீகாரத்தையும் தேடித் தரும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று நான் சொல்வேன்" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!