
ஜன., 16ல் துவங்கும் சிசிஎல் கிரிக்கெட் போட்டி: விளம்பர துாதர் நடிகை மீனா
இந்த ஆண்டுக்கான சிசிஎல் போட்டி ஜனவரி 16ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 1ம் தேதி வரை ஐதராபாத், மதுரை, மைசூரில் நடக்கிறது. தமிழ் நடிகர்கள் அணியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த முறை அணிக்கு வேல்ஸ் சென்னை கிங்ஸ் என பெயர் இடப்பட்டுள்ளது. ஐசரி கே கணேஷ், நடிகை ஸ்ரீபிரியா இந்த அணியை வாங்கி உள்ளனர்.
நடிகர் ஆர்யா தலைமையில் பரத், கலையரசன் உள்ளிட்ட பல நடிகர்கள் ஆடுகிறார்கள். இந்த அணியின் விளம்பர துாதுவராக நடிகை மீனா நியமிக்கப்பட்டுள்ளார். சரத்குமார் அணியின் ஆலோசகராக இருக்கிறார். வேல்ஸ் தயாரிக்கும் படங்களில் பல முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள்.
வேல்ஸ் தயாரிக்கும் மூக்குத்திஅம்மன் 2வில் நயன்தாரா நடிக்கிறார். பின்னே ஏன் மீனா என்று விசாரித்தால், அணியின் இன்னொரு ஓனர் ஸ்ரீப்ரியாவுக்கு அவர் நெருக்கமானவர். இதற்கான அவரின் சம்பளம் குறைவு என்கிறார்கள். இந்த அணியில் சிம்பு ஆடுகிறாரா என்பது குறித்து அறிவிப்பு இல்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!