
இயக்குனருக்கு முதல் முறை கார் பரிசளித்த பவன் கல்யாண்
பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால் அந்தப் படத்தை இயக்கிய இயக்குனருக்கு படத்தின் நாயகன் ஏதாவது பரிசளிப்பார். தமிழ் சினிமாவில் அப்படி கார்களைப் பெற்ற இயக்குனர்கள் சிலர் இருக்கிறார்கள். "விக்ரம், ஜெயிலர்" ஆகிய படங்களின் இயக்குனர்கள் அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களிடமிருந்து கார்களைப் பரிசாகப் பெற்றார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தில் இப்படி இதுவரை தனது இயக்குனர்களுக்கு எந்தவிதமான கார்களையும் பரிசளிக்காத பவன் கல்யாண் முதல் முறையாக "ஓஜி" இயக்குனர் சுஜித்திற்குக் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
அது குறித்து தனது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து, “இதுவே சிறந்த பரிசு. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு நெகிழ்ச்சியும் நன்றியும் அடைந்துள்ளேன். எனது அன்புக்குரிய "ஓஜி" கல்யாண்காருவிடமிருந்து கிடைத்த அன்பும் ஊக்கமும் எனக்கு எல்லாமே சிறு வயது ரசிகனாக இருந்ததிலிருந்து இந்த சிறப்பான தருணம் வரை… என்றென்றும் கடன்பட்டிருப்பேன்,” என இயக்குனர் சுஜித் குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!