
அவதார் 3 ரிலீஸ் : ஒதுங்கும் தமிழ்ப் படங்கள்
இந்த வாரம் டிசம்பர் 19ம் தேதி ஜேம்ஸ் கேமருனின் இயக்கத்தில் உருவாகியுள்ள "அவதார் 3 - பயர் அண்ட் ஆஷ்" படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகிறது. "அவதார்" சீரிஸ் படங்களுக்கு இந்தியாவில் எப்போதுமே தனிப்பட்ட வரவேற்பு உண்டு. இந்த மூன்றாம் பாகப் படத்தையும் பார்த்து ரசிக்க ஹாலிவுட் பட ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இப்படத்திற்கு நேரடி தமிழ்ப் படங்களுக்குக் கிடைப்பதைப் போல அதிகத் தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதனால், இந்த வாரம் ஓரிரு தமிழ்ப் படங்களே வெளியாக உள்ளன. சரத்குமார், சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள "கொம்பு சீவி" படம்தான் இந்த வாரத்திற்கான முக்கியத் தமிழ்ப்படம். இந்தப் படத்தை "வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன்" படங்களை இயக்கிய பொன்ராம் இயக்க, யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் தவிர ஓரிரு சிறிய பட்ஜெட் படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை உறுதியாக வருமா என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!