
பொங்கலுக்கு இத்தனை பான் இந்தியா படங்கள்? தாங்குமா தியேட்டர்கள் ?
"ஜனநாயகன், பராசக்தி" ஆகிய இரண்டு படங்களுமே பான் இந்தியா படங்களாக வர உள்ளன. இருந்தாலும் தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் இந்தப் படங்கள் கடும் போட்டியை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.
தெலுங்கில் பிரபாஸ் நடித்துள்ள "தி ராஜா சாப்" படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவி, நயன்தாரா நடித்துள்ள மற்றொரு தெலுங்குப் படமான "மன ஷங்கர்வரபிரசாத்காரு" படத்தின் வெளியீடும் ஜனவரி 12ம் தேதி என தற்போது அறிவித்துள்ளனர்.
2026 பொங்கல், சங்கராந்தி ஆகியவற்றை முன்னிட்டு ஓரிரு நாட்கள் இடைவெளியில் இரண்டு மொழிகளிலும் இப்படங்கள் போட்டியிட உள்ளது. இந்தப் படங்களின் நட்சத்திரங்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மொத்தமாக திருவிழா போல இப்படங்களின் வெளியீடு இருந்தாலும் தியேட்டர்கள் அவ்வளவு ரசிகர்கள் கூட்டத்தை எப்படித் தாங்கப் போகிறார்களோ?. இந்தப் படங்களால் கூட்டம் இல்லாமல் போயுள்ள தியேட்டர்களுக்கு ரசிகர்கள் மீண்டும் வந்தால் மகிழ்ச்சிதான் என்பதே திரையுலகினரின் நம்பிக்கையாக உள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!