
அகண்டா 2 : சமூக வலைத்தளங்களில் பரவும் டிரோல்கள்
பாலகிருஷ்ணா படம் என்றாலே அதிரடி மாஸ் ஆக்ஷன் இருக்கும். சாதாரண மனிதன் செய்யும் காட்சிகள் இல்லாமல் சூப்பர் பவர் பெற்ற ஒரு மனிதன் என்ன செய்வானோ அதைத்தான் அவரது படங்களின் காட்சிகளாக வழக்கமாக வைப்பார்கள். ஆனாலும், அதை ரசிப்பதற்கென்றே ரசிகர் கூட்டம் இருக்கிறது.
நேற்றைய பிரிமியர் காட்சிகளுக்குப் பிறகு அப்படத்தின் அப்படியான மாஸ் காட்சிகளை படம் பார்த்த ரசிகர்கள் பலர் மொபைல் போன்களில் வீடியோவாக எடுத்து அவற்றை சமூக வலைத்தளங்களில் "டிரோல்" செய்து பரப்புகிறார்கள். இது படத்திற்கு பாசிட்டிவ்வாக அமைவதை விட நெகட்டிவ்வாக அமையவும் வாய்ப்புகள் உண்டு. இப்பட காப்பிரைட் மீறலில் பகிரப்படும் வீடியோக்களைத் தடுப்பதற்கு படக்குழு நிறையவே உழைக்க வேண்டியிருக்கும்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!