
மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி
அவர் வெளியிட்டுள்ள காணொளியில், பெண்கள் எப்போதுமே ஆண்களுக்கு அடங்கி போக வேண்டும் என்று ஆணாதிக்க சமூகம் நினைக்கிறது. அப்படி அடங்கி போகாத பெண்களும், பெண் குழந்தைகளும் செத்துப் போகலாம் என்று இந்த குரூர புத்தி உடையவர்கள் பதிவு போடுகிறார்கள். எதிர்த்து பேசும் பெண்களை ஏதாவது ஒரு வகையில் இது போன்று இழிவுபடுத்துகிறார்கள். முன்பெல்லாம் பெண்களை பேய் பிடித்தவள், வசியம் செய்தவள் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மார்பிங் புகைப்படங்களை வெளியிடுகிறார்கள். இது போன்ற அயோக்கியர்களுக்கு இதை தவிர வேறு எதுவும் தெரியாது என்று ஆவேசமாக பேசி உள்ளார் பாடகி சின்மயி.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!