
ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்கள் அறிவிப்பு
முன்னணி ஓடிடித்தளமான ஜியோ ஹாட்ஸ்டார் வருங்காலத்தில் வெளியிடப்பட உள்ள திரைப்படங்கள் வெப் தொடர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விஜய் சேதுபதி நடிக்கும் "காட்டான்", யோகிபாபு நடிக்கும் "கெனத்த காணோம்", கதிர் நடிக்கும் "லிங்கம்", பிரியாமணி, நடிக்கும் "குட் வைப்" சீசன் 2, "ஹார்ட்பீட்" வெப் தொடரின் சீசன் 3, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் "லக்கி தி சூப்பர்ஸ்டார்", எருமசாணி விஜய் குமார் நடிக்கும் "ரிசார்ட்", கவுரி கிஷன் நடிக்கும் "லவ் ஆல்வேஸ்" உள்ளிட்ட தொடர்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு படைப்புகள் குறித்த அறிவிப்பையும் ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக நடந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, மோகன்லால், நாகர்ஜூனா உள்ளிட்ட தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் பங்கேற்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!