
அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட்
இந்த படத்தின் பிரமாண்ட புரமோசன் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் கலந்து கொண்டார். அர்னால்ட் தனது படங்கள் தவிர்த்து பிற படங்களின் நிகழ்வில் கலந்து கொள்வது அபூர்வமானது என்பதால் இதனை ஹாலிவுட் திரையுலகம் ஆச்சர்யத்துடன் பார்க்கிறது.
அர்னால்ட் தனது நீண்டகால நண்பரான இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுக்கு தனது ஆதரவை வழங்கினார். பல ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் நல்ல நட்பில் இருந்து வருகின்றனர். "தி டெர்மினேட்டர்" திரைப்படத்தில் இணைந்த இருவரும் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!