
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி?
இருந்தாலும் மணிரத்னம் அவரது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கினார். அந்தப் படத்தில் நடிக்க சிலரது பெயர்கள் அடிபட்டு கடைசியாக விஜய் சேதுபதி நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார் என்ற தகவல் வெளியானது. படத்தில் அவரது ஜோடியாக நடிப்பதற்காக சாய் பல்லவியை அணுகி கதை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அந்தக் கதையில் தனக்கான வேலை அதிகமில்லை என அவர் நடிக்க மறுத்துவிட்டார் என்றும் சொன்னார்கள். அதன்பின் சில மாற்றங்களைச் செய்து அந்தக் கதாபாத்திரத்திற்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்து அவரிடம் மீண்டும் கதையைச் சொன்னார்களாம். அதைக் கேட்ட பின் படத்தில் நடிக்க சாய் பல்லவி சம்மதிவிட்டார் என்பது லேட்டஸ்ட் தகவல்.
தற்போது அவரை வைத்து படத்தின் போட்டோ ஷுட் நடந்து வருகிறதாம். 2026 பொங்கலுக்குப் பிறகு படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!