
மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயனின் 25வது படமான இப்படத்தில் அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். வருகிற பொங்கலை ஒட்டி ஜனவரி 14ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வரும் நிலையில், பராசக்தி படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை இயக்கப் போகிறார் சுதா. அது குறித்த கதையை அவரிடத்தில் சொல்லி அவர் ஓகே வாங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!