
ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன்
யுகே ஸ்குவாட் தயாரிக்கும் படம் "டெக்சாஸ் டைகர்". "பேமிலி படம்" படத்தை இயக்கிய செல்வகுமார் திருமாறன் இயக்குகிறார். "டியூட், தக்ஸ், பேட் கேர்ள், ஆல் வி இமேஜின் ஆஸ் லைட், முரா" ஆகிய படங்களில் நடித்து ஹிருது ஹாருன் நாயகனாக நடிக்கிறார்.
நாயகியாக சம்யுக்தா விஸ்வநாதன் நடிக்கிறார். "சுழல்" வெப் தொடர் மூலம் புகழ்பெற்ற இவர் அதற்கு பிறகு "மிஸ்டர் பாரத்" படத்தில் நடித்தார், தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் "ஐ அம் தி கேம்" படத்தில் நடித்து வருகிறார்.
இவர்களுடன் ரோகிணி மொல்லேட்டி, சாச்சனா, வாபா கதீஜா, பீட்டர் கே, பார்த்திபன் குமார், ஆண்டனி தாசன் மற்றும் சம்யுக்தா ஷான் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மியூசிக்கல் சப்ஜெக்டாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ஓஷோ வெங்கட் இசை அமைக்கிறார், விஷ்ணு மணி வடிவு ஒளிப்பதிவு செய்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!