
கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு திரைக்கு வரும் கொம்பு சீவி
"வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, எம்ஜிஆர் மகன், டிஎஸ்பி" போன்ற படங்களை இயக்கியவர் பொன்ராம்.
தற்போது விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் ‛கொம்பு சீவி" என்கிற படத்தை இயக்கியுள்ளார். சரத்குமார், காளி வெங்கட், தாரணிகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு திரைக்கு வருகிறது என இன்று அறிவித்துள்ளனர். இந்த படத்தை தமிழகத்தில் பிரபல விநியோகஸ்தர் எஸ் பிக்சர்ஸ் சுப்பையா வெளியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!