
தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்….
தமிழில் நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் கூட தனி கதாநாயகியாக தனி முத்திரை எல்லாம் பதிக்கவில்லை. நயன்தாரா நடித்து 2017ல் வெளிவந்த "அறம், கோலமாவு கோகிலா" படங்கள் மட்டும்தான் அவரது தனி கதாநாயகியர் படங்களில் வரவேற்பைப் பெற்றது. அதன்பின் வந்த "ஐரா, கொலையுதிர் காலம், நெற்றிக்கண், ஓ 2, அன்னபூரணி" ஆகிய படங்கள் ஓடவேயில்லை. "மூக்குத்தி அம்மன்" படம் மட்டும் ரசிக்க வைத்தது. அதில் ஆர்ஜே பாலாஜியின் நகைச்சுவை நடிப்பிற்கும் பங்குண்டு.
த்ரிஷா நடித்து வெளிவந்த தனி கதாநாயகி படங்களான, “நாயகி, மோகினி, ராங்கி, த ரோடு” ஆகிய படங்கள் வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது. அவர் தனி கதாநாயகியாக நடித்து முடித்த "கர்ஜனை" படம் முடிந்து சில வருடங்களாக முடங்கியே உள்ளது. வெளியீட்டுத் தேதி அறிவித்த பின்பும் வெளியாகவில்லை.
கீர்த்தி சுரேஷ் தனி கதாநாயகியாக நடித்து வந்த தமிழ்ப் படங்களில், ஓடிடியில் வெளியான "பெண்குயின்," தியேட்டர்களில் வெளியான "ரகு தாத்தா" இரண்டுமே வரவேற்பைப் பெறவில்லை. இன்று வெளியாகி உள்ள "ரிவால்வர் ரீட்டா" படத்திற்கும் எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை.
"லோகா" மூலம் கல்யாணி பிரியதர்ஷன் தந்த ஒரு வெற்றியை நயன்தாரா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் போன்ற முன்னணி நடிகைகள் தருவார்களா என்பதும் பெரிய கேள்விதான்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!