
அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்?
இந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் தமிழ் இயக்குனருடன் அல்லு அர்ஜுன் கூட்டணி வைக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள அந்தப் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம்.
"கூலி" படத்தை எதிர்பார்த்த அளவிற்கு லோகேஷ் தரவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. அதனால், ரஜினி, கமல் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்காது என்றார்கள். என்றாலும், "கூலி" படத்தில் வாங்கியதை விட கூடுதல் சம்பளத்துடன் அவரை ஒப்பந்தம் செய்ய சில தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளார்களாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!