
4 ஆண்டுகளை நிறைவு செய்த மாநாடு
படம் வெளியாகி இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது. அது குறித்து படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, “நாங்கள் இந்த சுவாரசியமான டைம்-லூப் படம் மாநாடு உருவாக்கியபோது, ஒரு விஷயத்தை உறுதியாக நம்பினேன். எங்கள் பார்வையாளர்கள் அதைப் புரிந்து கொள்வார்கள் என்று. ஆனால் நீங்கள் அனைவரும் நாங்கள் கற்பனை செய்ததை விட அதிகமாக அதைப் புரிந்துகொண்டீர்கள்!
சினிமாவில் சோதனைகளை கொண்டாடியதற்கு நன்றி. நீங்கள் எங்களை எல்லைகளைத் தள்ள வைக்கிறீர்கள்.. நம்பிக்கைக்கு நன்றி,” என படக்குழுவினரை டேக் செய்து நன்றி தெரிவித்துள்ளார்.
"மாநாடு" படத்தின் இரண்டாம் பாகம் வந்தாலும் நன்றாக இருக்கும் என்று அப்போதே ரசிகர்கள் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், அது இன்னும் நடக்காமலேயே உள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!