
சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில்
மேலும் அவர் கூறுகையில் ""கல்யாணி பிரியதர்ஷன் வளர்ச்சியும் சந்தோசமாக இருக்கிறது. அவர் தந்தை பிரியதர்ஷன்தான் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். நானும் கல்யாணியும் நல்ல நட்பில் இருக்கிறோம், லோகா படம் பார்த்துவிட்டு அவரை பாராட்டினேன். தென்னிந்தியாவில் அதிக வசூல் செய்த ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் லோகா இடம் பெற்றுள்ளது பெருமை.
இப்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள நிறைய வருகின்றன. ஆனால், ஹீரோயின்களுக்கு சம்பளம் குறைவுதான். அவர்கள் நடிக்கும் படம் பிஸினஸ் ரீதியாக பல கோடி வசூலித்து, நல்ல லாபத்தை கொடுத்தால் அவர்கள் சம்பளமும் அதிகரிக்கும். என் அப்பா தயாரிப்பாளர் என்றாலும், எனக்கு படம் தயாரிப்பில் ஆர்வம் இல்லை" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!