
ஹீரோவான யு டியூபர்
அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன் இயக்கத்தில் பைனலி பாரத் இதில் கதை நாயகனாக நடிக்கிறார். யு டியூப் பிரபலமான இவர், லவ் டுடே, பிரின்ஸ், பரோல் உள்ளிட்ட சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்தர். இவரது ஜோடியாக "குடும்பஸ்தான்" நாயகி ஷான்வி மேக்னா நடிக்கிறார்.
படம் குறித்து தயாரிப்பாளர் அருண் விஸ்வா கூறும்போது, “புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் ஊக்குவிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில், பைனலி பாரத் டீன் ஏஜ் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் வெகு பரிச்சியமான நபர். இந்தப் படத்திற்காக அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி.
அதுபோலவே, "குடும்பஸ்தன்" படம் மூலம் ரசிகர்களின் அன்பைப் பெற்ற நடிகை ஷான்வி மேக்னாவும் இந்தப் படத்தில் நடிக்கிறார். இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.
"புரொடக்ஷன் நம்பர் 4" படம் மூலம் ஹரிஹரசுதனை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறோம். பால சரவணன் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழு குறித்தான தகவல்களை விரைவில் வெளியிடுவோம்” என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!