
பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை
போர் தளபதியான சிவாஜியை நடன மங்கையான பத்மினியும், இளவரசி லலிதாவும் காதலிப்பதாக கதை. இறுதியில் பத்மினிக்காக, லலிதா காதலை விட்டுக் கொடுப்பார்.
இந்த படத்தை லேனா செட்டியார், கிருஷ்ணா பிக்சர்ஸ் மூலம் தயாரித்தார், ஜி.ராமநாதன், விஸ்வாநாதன், ராமமூர்த்தி இசை அமைத்தனர். டி.யோகானந்த் இயக்கினார்.
எம்.என். நம்பியார், என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், இ.ஆர்.சகாதேவன், டி.இ. கிருஷ்ணமாச்சாரி, ராகினி, ஆர்.பாலசுப்ரமணியம், பி.எஸ்.வீரப்பா, டி.பாலசுப்ரமணியம், டி.கே. சம்பங்கி, குசலகுமாரி, ருஷ்யேந்திரமணி, எம்.சரோஜா, கே.எஸ். அங்கமுத்து, "புலிமூட்டை" ராமசாமி, "கொட்டப்புலி" ஜெயராமன், கரிகோல் ராஜு உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படம் தெலுங்கில் "விஜயா கவுரி" என்ற பெயரில் ரீமேக் ஆனது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!