
ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா?
இந்த சூழ்நிலையில், அந்த படத்தை தனுஷ் இயக்கப்போகிறார் என்று கோலிவுட்டில் தகவல் கசிந்தது. இது உண்மையா என விசாரித்தால், "ரஜினியின் மருமகனாக இருந்தபோது கூட, ரஜினியின் தீவிர ரசிகராகவே தன்னை வெளியில் காண்பித்தார் தனுஷ். மண வாழ்க்கையில் பிரிவு வந்தபின்னரும் அந்த நிலையில் இருந்து மாறவில்லை.
ரஜினியும் இதுவரை தனுஷை குறை சொன்னது இல்லை. ஆனால், இருவரும் இதுவரை எந்த படத்திலும் இணைந்து கூட நடித்தது இல்லை. சில படங்களை தனுஷ் இயக்கி இருந்தாலும் ரஜினி படத்தை இயக்கும் அளவுக்கு சிறந்த இயக்குனரா என பலருக்கும் டவுட். தவிர, நாலைந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். அதை முடிக்கவே 2 ஆண்டுகள் ஆகும்.
ரஜினி படமென்றால் கதை விவாதம், முன்னேற்பாடு பணிகளுக்கு பல மாதங்கள் ஆகும். எனவே, தனுஷ் இயக்குவது டவுட் தான். தவிர, ரஜினியும், மகள் ஐஸ்வர்யா மனநிலையை கருத்தில் கொண்டு தனுஷ் படத்தில் நடிப்பதை தவிர்ப்பார். இதை மீறி இரண்டு பேரும் இணைந்தால் அது ஆச்சரியம்தான் என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!