
56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா!
இந்த நிலையில் நவம்பர் 20 முதல் 28ம் தேதி வரை கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையுலகில் ரஜினி 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக அவரை கவுரவிக்க இருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்த பாராட்டு விழா வருகிற 28ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதேபோல் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும் இந்த விழாவில் கவரவிக்கப்பட உள்ளார்.
அதாவது, ரஜினிகாந்த் 1975ல் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார் என்றால் பாலகிருஷ்ணாவோ 1974ம் ஆண்டிலேயே "தத்தம்மா காலா" என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி விட்டார். அந்த வகையில் ரஜினியை போலவே பாலகிருஷ்ணாவும் தெலுங்கு சினிமாவில் 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார். அதனால் இவர்கள் இரண்டு பேருக்கும் நவம்பர் 28ம் தேதி கோவாவில் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!