
8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா
நடிகை ஆண்ட்ரியா தயாரித்து நெகட்டிவ் ரோலில் நடிக்கும் படம் "மாஸ்க்". கவின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக ருஹானி சர்மா நடித்துள்ளார். படம் வருகிற 21ம் தேதி வெளிவருகிறது.
ருஹானி சர்மா தமிழுக்கு புதியவர் அல்ல. இமாச்சலத்தை சேர்ந்த மாடல் அழகியான இவர் 2017ம் ஆண்டு வெளிவந்த "கடைசி பெஞ்ச் கார்த்திக்" என்ற படத்தின் மூலம்தான் சினிமா நடிகை ஆனார்.
அதன்பிறகு இங்கு வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாள படங்களுக்கு சென்று ஒரு ரவுண்ட் அடித்து விட்டு தற்போது "மாஸ்க்" படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். "மாஸ்க்" ருஹானிக்கு மாற்றம் தருமா என்பது 21ம் தேதி தெரிய வரும்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!