
பிளாஷ்பேக் : சொந்த வாழ்க்கை கதையில் நடித்த சுதா சந்திரன்
ஆனால் சுதா சந்திரன் தன் கதையில் தானே நடித்தார். திருச்சி அருகே வயலூர்தான் சுதாவின் சொந்த ஊர். ஆனால் அவர் மும்பையில் பிறந்து வளர்ந்தார். முறைப்படி நாட்டியம் கற்று இந்திய அளவில் புகழ்பெற்ற நடன கலைஞரான இருந்தார். சாலை விபத்து ஒன்றில் அவர் தனது ஒரு காலை இழந்தார்.
அதன்பிறகு முறையான பயிற்சியெடுத்து செயற்கை கால் பொருத்தி மீண்டும் நடனமாடினார். அவரது தன்னம்பிக்கையும, விடா முயற்சியும் உலகிற்கே எடுத்துக் காட்டானது. அவரது வாழ்க்கை "மயூரி" என்ற பெயரில் தெலுங்கில் தயாரானது. பின்னர் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது.
இந்த படத்தை சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கினார். சுதாவுடன் பி.எல்.நாராயணா, வீரமாச்சேனி, ஒய்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்தனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசை அமைத்திருந்தார். 1985ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தில் வெளியிடப்பட்டு பெரிய வெற்றி பெற்றது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!