
மை டியர் சிஸ்டர் என்ன மாதிரியான கதை
படம் குறித்து இயக்குநர் பிரபு ஜெயராம் கூறும்போது, " "பாசமலர்" படத்தில் ஆரம்பித்து 1990களில் வெளியான "கிழக்கு சீமையிலே", பிளாக்பஸ்டர் ஹிட் படமான "வேதாளம்" எனப் பல படங்கள் அண்ணன்- தங்கை பாசத்தை பல தலைமுறைகளாக பேசி வருகிறது. அந்த வகையில், "மை டியர் சிஸ்டர்" உணர்வுப்பூர்வமான கதையை வழங்குகிறது. ஆணாதிக்கவாதியான பச்சை கிருஷ்ணனுக்கும் பெண்ணியவாதியான அவனது அக்கா நிர்மலா தேவிக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள்தான் இந்தக் கதை. அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸின் ஜாலியான பல தருணங்களை கொண்டே உருவாக்கினோம். திரையிலும் இவர்களது காம்பினேஷன் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!