
100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல்
முன்னதாக இந்த படத்தில் இருந்து ‛தேரே இஷ்க் மெயின்..." என்ற பாடலை கடந்த அக்., 18ம் தேதியன்று யு-டியூப் தளத்தில் வெளியிட்டனர். அர்ஜித் சிங் இந்த பாடலை பாடி உள்ளார். இர்ஷாத் கமில் பாடல் வரிகளை எழுதி இருந்தார். காதலின் வலியை சொல்லும் விதமாக வெளியான இந்த பாடல் மூன்று வாரங்களை கடந்துள்ள நிலையில் 100 மில்லியன் பார்வைகளை, அதாவது 10 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
இதேப்போல் தமிழில் இந்தபாடல் ‛ஓ காதலே" என்ற பெயரில் இருவாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அந்த பாடலுக்கு 5.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. இந்தப்படம் இம்மாதம் 28ம் தேதி ஹிந்தி மட்டுமல்லாது தமிழிலும் வெளியாகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!