
பிளாஷ்பேக்: 11 வயதில் பின்னணி பாடகியான ஏ.பி.கோமளா
1940களின் இறுதியில் ஆரம்பித்து 1970வரை கோமளாவின் குரல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னந்திய மொழிகளில் ஒலித்தது. தனது 11 வது வயதில் திரைப்படங்களுக்கு பின்னணி பாட ஆரம்பித்தார். குழந்தை நட்சத்திரங்களுக்கு பின்னணி பாடி வந்த கோமளாவிற்கு 1949ம் ஆண்டு வெளியான "வேலைக்காரி" படத்தில் இடம்பெற்ற, "உலகம் பலவிதம்" பாடல் தான் அவரை பிரபலப்படுத்தியது. அதை பாடியபோது கோமளாவின் வயது 13. இந்தப் பாடலின் பிரபலம் கோமளாவையும் சிறந்த பின்னணிப் பாடகி வரிசையில் சேர்த்தது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!