
மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா : முதல் பார்வை போஸ்டர் வெளியீடு
முதலில் கும்பா என்ற கேரக்டரில் பிரித்விராஜ் நடிப்பதாக அறிவித்து அவரின் முதல் பார்வையை வெளியிட்டனர். தொடர்ந்து படத்தின் முன்னோட்ட பாடலாக " குளோப் ட்ராட்டர்"-ஐ வெளியிட்டனர். இதை ஸ்ருதிஹாசன் பாடியிருந்தார். நாளைமறுதினம் நவ., 15ல் படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டரை பிரமாண்டமான விழா வைத்து வெளியிடுகின்றனர். இதை ஓடிடியிலும் நேரலையில் ஒளிபரப்ப உள்ளனர்.
இந்நிலையில் நாயகி பிரியங்கா சோப்ராவின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். அவர் மந்தாகினி என்ற கேரக்டரில் நடிக்கிறார். மலைகளுக்கு நடுவே அதிரடி ஆக் ஷன் காட்சியில் அவர் நடித்திருப்பது போன்று போஸ்ரை வெளியிட்டுள்ளனர். பொன்னியின் செல்வன் நாவலில் வரும் ஊமை ராணியின் பெயர் இது. மேலும் ராமாயணத்தில் சொல்லப்பட்ட ஒரு நதியின் பெயரும் கூட இது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!