
ப்ரூஸ் லீ படத்தின் இன்ஸ்பிரேஷன் தான் சிவா
இப்படத்தின் பத்திரிகையாளர் சிறப்புக் காட்சியை முடித்த பிறகு இயக்குனர் ராம்கோபால் வர்மா, நாகார்ஜுனா பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய ராம் கோபால் வர்மா, “1972ல் வெளியான ‛தி வே ஆப் டிராகன்"(ரிட்டர்ன் ஆப் தி டிராகன்) படத்தில், ப்ரூஸ் லீ ரோம் நகருக்குப் போகிறார். அங்கு ரெஸ்டாரன்ட்டில் தொந்தரவு செய்யும் ரவுடிகளுடன் சண்டையிடுகிறார். நான் ரெஸ்டாரன்ட் என்பதை கல்லூரி என்று மாற்றினேன், அதோடு என் சொந்த அனுபவங்களை சேர்த்தேன். இது, நான் எழுதியதில் வேகமான ஒரு வரிக் கதையாக இருக்கலாம்” என்று ராம் கோபல் வர்மா கூறினார்.
ஏதோ ஒரு படத்தின் ஏதோ ஒரு காட்சியிலிருந்து அல்லது கதாபாத்திரத்திலிருந்து "இன்ஸ்பயர்" ஆகித்தான் பல படங்களின் ஒரு வரிக் கதைகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், அதை திரைக்கதையாக எப்படிச் சொல்கிறோம் என்பதில்தான் படத்தின் வெற்றி அமைகிறது. அந்த விதத்தில் "சிவா" படத்தின் வெற்றி அமைந்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கொண்டாடப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!