
ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்?
இந்த நிலையில் தற்போது தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் ரஜினி நடிக்கும் 173வது படத்தை கமல் தயாரிக்கிறார். சுந்தர் .சி இயக்கும் இப்படத்தில் கமல்ஹாசன் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் இது குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, ஏற்கனவே தான் தயாரித்த மகளிர் மட்டும், நள தமயந்தி போன்ற படங்களில் கமல் நடித்துள்ளார். அது அப்போது அந்த படங்களின் வியாபாரத்துக்கு பயன்பட்டது. என்றாலும் இப்போது அவர் தயாரிப்பது ரஜினி படம் என்பதால் இந்த படத்தில் அவர் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். அதோடு அடுத்தபடியாக ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கும் படத்திற்கான கதை கேட்கும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு சரியான பொருத்தமான கதை அமைந்ததும் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறுகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!