
மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு
நன்தாராவும், விக்னேஷ் சிவனும் அவ்வப்போது கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். இப்போது இவர்கள் மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகா காலேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் அங்குள்ள நந்தி சிலைக்கு அபிஷேகமும் செய்தனர். இவர்களுடன் நடிகை ஸ்ரீலீலாவும் இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இவர்களுக்கு கோயில் சார்பில் வரவேற்பும், மரியாதையும், பிரசாதமும் வழங்கப்பட்டது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!