
சினேகா கேட்ட கேள்வி : பதில் சொல்ல மறுத்த சேரன்
அவர் பேசுகையில் ""ஆட்டோகிராப் படம் பார்த்துவிட்டு ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக இருக்க முடியுமா என்று அந்த காலத்திலேயே கேட்டார்கள். நான் முடியும் என்று நிரூபித்து இருக்கிறேன். இன்றும் சேரனும் நானும் நட்பாக இருக்கிறேன். நான் நடித்த படங்களில் ஆட்டோகிராப் சிறந்த படம். குறிப்பாக, ஒவ்வொரு பூக்களிலும் பாடல் அவ்வளவு பிடிக்கும். அந்த பாடலில் எப்படி நடிக்க வேண்டும் என நிறைய சொல்லிக் கொடுத்தார் சேரன். அந்த படம் முடிந்தவுடன் பிரிவோம் சந்திப்போம் படத்தில் கணவன் மனைவியாக நடித்தபோது, நாம நண்பர்கள், அப்படி நடிக்க முடியுமா என்று கேட்டார் சேரன். அதை மீறி நல்ல படங்கள் பண்ணினோம். இந்த படம் ரீ ரிலீஸ் என்று தெரிந்தவுடன் என் அப்பா படம் பார்க்க ஆசைப்பட்டார்.
நான் சேரனிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு எத்தனை காதல் பாதிப்பு இருந்தது. அது நிறைய இருக்கும்னு நினைக்கிறேன். அதுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றார்.
இதற்கு தனது பேச்சில் பதில் அளித்த சேரன். ‛அது பற்றி இப்ப பேச முடியாது. நேரமாகிவிட்டது. இன்னொரு மேடையில் ஒரு நாள் முழுக்க பேசுவோம்" என்று எஸ்கேப் ஆனார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!