
புராண பின்னணியில் புதிய அனிமேஷன் பாகுபலி : டீசர் வெளியீடு
இந்நிலையில் தற்போது "பாகுபலி தி எடர்னல் வார்" என்ற அனிமேஷன் படத்தை உருவாக்கி வருகின்றனர். இதை இஷான் சுக்லா என்பவர் இயக்கி உள்ளார். இதன் அறிமுக டீசர் வெளியாகி உள்ளது. பாகுபலி இறந்த பின்னர் அவரது ஆன்மாவை வைத்து புராண பின்னணியில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை வைத்து இப்படம் இருக்கும் என டீசரை பார்க்கையில் புரிகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இதன் டீசரை வெளியிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கை விட ஹிந்தியில் இந்த டீசருக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. "பாகுபலி தி எடர்னல் வார்" அனிமேஷன் படமும் இரண்டு பாகங்களாக வெளியாகும் என தெரிகிறது. முதல்பாகம் 2027ல் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!