
ஜாய் கிரிசில்டா உடன் திருமணம், குழந்தை : ஒப்புக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்
சமீபத்தில் மாநில மகளிர் ஆணையம் முன்பு நடந்த விசாரணையில் ரங்கராஜ் தன் மனைவி உடன் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். அதேப்போல் ஜாய் கிரிசில்டாவும் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்தச்சூழலில் கடந்தவாரம் ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை ரங்கராஜ் போன்றே இருப்பதாகவும், ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ் பிறந்து இருப்பதாகவும் ஜாய் கிரிசில்டா வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க போலீஸிற்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதற்கிடையே ஜாய் கிரிசில்டா வெளியிட்ட பதிவில், ‛‛மகளிர் ஆணையம் முன்பு நடந்த விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்ததையும், இந்த குழந்தை தன்னுடையது தான் என ஒப்புக் கொண்டதாகவும்"" குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!