
தெலுங்கில் படம் தயாரிக்கும் சமந்தா : தமிழை புறக்கணிப்பது ஏன்
மா இண்டி பங்காரம் படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இவர் சமந்தா நடித்த "ஓ! பேபி" படத்தை இயக்கியவர். இந்த படத்தில் சமந்தா கதைநாயகி குல்ஷன் தேவ்வய்யா, திகாந்த் , கவுதமி, மஞ்சுஷா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த இரண்டு படங்களுமே தெலுங்கு படங்கள்.
சென்னையில் பிறந்த வளர்ந்த சமந்தா, ஏன் தமிழ் படங்களை தயாரிப்பது இல்லை. தனது தெலுங்கு படங்களை தமிழில் ஏன் டப் செய்வது இல்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. தெலுங்கில் படம் தயாரிக்க அவருக்கு உதவிகள் கிடைக்கின்றன. அது தமிழில் குறைவு. அதனால், அவர் கோடம்பாக்கம் பக்கம் வருவது இல்லை என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!