
லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். படத்திற்கு ‛டிசி" (DC) என பெயரிட்டுள்ளனர். நாயகியாக ‛மாலை நேரத்து மயக்கம்" படத்தில் நடித்த வாமிகா கபி நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இப்படம் தொடர்பாக வெளியிடப்பட்ட முன்னோட்ட வீடியோவில் கையில் கத்தி உடன் வாயில் புகைத்தப்படி, முகத்தில் ரத்தக்கறையுடன் ‛தேவதாஸ்" என்ற கேரக்டரில் லோகேஷ் வருகிறார். வாமிகா கபி பாலியல் தொழில் செய்பவர் போன்று சந்திரா என்ற ரோலில் நடிப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளனர். இவர்களின் கேரக்டர் பெயர் தேவதாஸ், சந்திரா என்பதன் சுருக்கமாக ‛டிசி" (DC) என பெயரிட்டுள்ளனர். படம் ஆக் ஷன் கதையில் தயாராகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!