லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி
அக் 30, 2025
Advertisement
ராக்கி, கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படம் கேங்க்ஸ்டர் கதையில் ஆக் ஷன் படமாக உருவாகிறது. இதற்காக லோகேஷ் கனகராஜ் தற்காப்பு கலை பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஏற்கனவே இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இதில் லோகேஷ் கனகராஜூக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை வாமிகா கபி இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வாமிகா கபி தமிழில் "மாலை நேரத்து மயக்கம்" படத்தில் நடித்திருந்தார். இது அல்லாமல் "ஜீனி" படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!