
காதலருடன் புதிய படத்திற்கு பூஜை போட்ட சமந்தா
அடுத்து இரண்டாவது தயாரிப்பாக "மா இண்டி பங்காரம்" என்ற படத்தைத் தயாரிக்கிறார். அதற்கான பூஜையில் தனது காதலர் ராஜ் நிடிமொரு உடன் கலந்து கொண்டார். முதல் படத் தயாரிப்பிலும் காதலர் ராஜ் நிடிமொரு, சமந்தாவுக்கு உதவியாக இருந்தார். தற்போது இரண்டாவது படத் தயாரிப்பிலும் அது தொடர்கிறது.
இப்படத்தில் சமந்தா, குல்ஷன் தேவய்யா, திகநாத், கவுதமி, மஞ்சுஷா ஆகியோர் நடிக்க உள்ளார்கள். "ஓ பேபி" படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இந்தப் படத்தை இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பூஜையுடன் படப்பிடிப்பையும் ஆரம்பித்துவிட்டார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!