
அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ்
அவரது இயக்கத்தில் வந்த "பரியேறும் பெருமாள்" படத்தில் நாயகன் கதிர் அப்பா கதாபாத்திரத்தில் கூத்துக் கலைஞர் வண்ணாரப்பேட்டை தங்கராஜ், "கர்ணன்" படத்தில் நாயகன் தனுஷ் அப்பா கதாபாத்திரத்தில் பூ ராமு, "மாமன்னன்" படத்தில் நாயகன் உதயநிதியின் அப்பா கதாபாத்திரத்தில் வடிவேலு, "பைசன்" படத்தில் நாயகன் துருவ் விக்ரமின் கதாபாத்திரத்தில் பசுபதி ஆகியோர் நடித்திருந்தார்கள்.
ஒரு படத்தில் நாயகன் பற்றியோ, நாயகி பற்றியோ பேசப்படுவதை விடவும், அந்தப் படத்தில் மற்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களைப் பற்றிய பேச்சு வரும் போது அந்தப் படங்களின் கதாபாத்திர வடிவமைப்பும் பேசப்படுகிறது. அப்படியான ஒரு தாக்கத்தை மாரி செல்வராஜின் அப்பா கதாபாத்திரங்கள் ஏற்படுத்தி இருக்கின்றன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!