
அதிக சம்பளமா? அதிர்ச்சியான மமிதா பைஜூ
இந்த வருட தீபாவளிக்கு வெளிவந்த "டியூட்" படம் மூலம் தமிழ் ரசிகர்கள் பலரிடமும் பிரபலமாகிவிட்டார் மமிதா. அடுத்து விஜய்யுடன் "ஜனநாயகன்", சூர்யாவின் 46வது படம் ஆகியவற்றிலும், "இரண்டு வானம்" படத்திலும் நடித்து வருகிறார்.
"டியூட்" வெற்றிக்குப் பிறகு மமிதா பைஜு, 15 கோடி சம்பளம் கேட்பதாக கடந்த வாரம் ஒரு செய்தி பரவியது. ஆனால், தற்போது ஹைதராபாத்தில் உள்ள மமிதாவிடம் அது பற்றி கேட்ட போது அதிர்ச்சியடைந்து அதை மறுத்தார். அது வெறும் வதந்தி என்றும் தன்னுடைய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தயாரிப்பாளர்களுக்குத் தெரியும், இது போன்ற வதந்திகளை திரை உலகினர் யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!