அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் பல்ஸ்
அக் 25, 2025
Advertisement
சிறிய இடைவெளிக்கு பிறகு மாஸ்டர் மகேந்திரன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் "பல்ஸ்". குளோபல் பிக்சர்ஸ் அழகர்ராஜ் ஜெயபாலன் தயாரிக்கிறார். நவின் கணேஷ் இயக்குகிறார். ரிஷிகா ராஜ்வீர், ஆர்.வி.உதயகுமார், லிவிங்ஸ்டன், கும்கி அஸ்வின், கூல் சுரேஷ், கேபிஒய் சேது மற்றும் கேபிஒய் சரத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அபிஷேக் ஏ.ஆர் இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் நவின் கணேஷ் கூறும்போது "அரசு மருத்துவமனைகளின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க சமூகப் பிரச்னையை ஆராய்வதாக "பல்ஸ்" கதை த்ரில்லர் படமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் பெரும்பாலும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி, சோளிங்கர் மற்றும் அரக்கோணம் ஆகிய இடங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. போஸ்ட் புரொடக்ஷன் முடியும் தருவாயில் உள்ளதால், விரைவில் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது" என்றார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!